பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆத்தாளூர் மரியம்பீவி அம்மா தர்கா அருகே உள்ள குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தூர் வாரும் பணியை துவக்கி வைத்தார்.
மெகா பவுண்டேசன் நிறுவனரும், வாட்டர் வாரியருமான நிமல் ராகவன் முன்னிலை வகித்தார்.
இதில், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாமா செந்தில்நாதன், பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் மற்றும் ஆத்தாளூர் பகுதி சிறுபான்மை இன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் புழக்கத்தில் இருந்து, நீர் வரத்து வாய்க்கால் அடைபட்டதால், வறண்டு கிடக்கும் இக்குளத்தை , சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று, மெகா பவுண்டேசன் அமைப்பு சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.