மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலைய 2-வது அலகில் கொதிகலன் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து, மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இரண்டு அலகுகள் இயங்கி வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இரண்டாவது பிரிவில், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரண்டு அலகுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், கடந்த 15-ம் தேதி இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. தற்போது கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டது.
நேற்று முதல் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.