சென்னை: தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, “பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள சின்னமுட்டலுவில் நீர்த் தேக்கத் தொட்டி கட்ட அரசு முன்வருமா?” என்று பெரம்பலூர் எம்எல்ஏ ம. பிரபாகரன் (திமுக) கேட்டார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இந்த திட்டம் குறித்து 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 12 மீட்டர் ஆழம் வரை கூழாங்கற்கள், மண் கலந்து காணப்படுகிறது. அதற்கு கீழே மக்கிய மணல் காணப்படுகிறது. எனவே, இந்த இடத்தில் நீர் தேக்க வாய்ப்பு இல்லை” என்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லார் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.