கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சபைக்கு மட்டும் முன்னுரிமை வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போரூர் பங்குனி உத்திர பால்காவடிவேல் பூஜை சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலில் வழிபாடு நடத்த குறிப்பிட்ட சபாவுக்கு மட்டுமே தனி உரிமை உண்டு என்று கூறியது. வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு; சபா சார்பில் தேர் திருவிழாவில் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, விழாவில் பங்கேற்க அறநிலையத்துறையிடம் அனுமதி பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.