தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500க்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை தேடும் பெண்களுக்காக வரும் 29 காலை 10 மணி அளவில் நடைபெறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்துகொண்டு 1500 க்கும் அதிகமான காலி பணி இடங்களை நிரப்ப உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்