சென்னை: தமிழக சட்டசபையில் கடைபிடித்த மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் மது அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது கடும் பிரச்னையாக மாறியதால், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை, சட்டசபையில் தமிழக அரசு கொண்டு வந்தது.
சட்டத்திருத்தத்தின்படி, கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் அம்மாசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த மதுவிலக்கு திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.