மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மற்றும் சீருடைகளை மாணவர்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள திருவிக மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (2ம் தேதி) நடைபெற்ற விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர் மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , உயர் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.