தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (பிப்.08) நடைபெறவுள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த முகாமில், ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தங்களை செய்துகொள்ளலாம்