சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் எம்.சுப்பிரமணியம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டார். மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கவுன்சலிங் ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்குகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 150 மாணவர்கள் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரி மருத்துவ மிஷன் மற்றும் ஆராய்ச்சி மையக் கல்லூரியில் 100 மாணவர்களும் மொத்தம் 150 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன.
இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தேதி துவங்குகிறது.இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அடுத்து நாமக்கல்லை சேர்ந்த ரஜினிஷ் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அதேபோல், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் 3683 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில் சென்னையைச் சேர்ந்த ரூபிகா 669 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். காயத்ரி இரண்டாமிடமும், அனுஷ்யா மூன்றாமிடமும், ரதீஸ் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறும்” என்றார்.