புதுச்சேரி: புதுச்சேரியில், பாரதிய ஜனதா கட்சிக்குள், எம்.எல்.ஏ.,க்கள் இடையே, தொடர்ந்து விரிசல் நிலவி வருவதால், கட்சி மேலிட உத்தரவுப்படி, பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. புதுவையில் ஆளும் ஆட்சியில் பா.ஜ.,வை சேர்ந்த செல்வம் பேரவை தலைவராகவும், நமச்சிவாயம் உள்துறை அமைச்சராகவும், சாய்சரவணக்குமார் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும் உள்ளனர்.
தற்போது பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சைகள் மற்றும் நியமன எம்எல்ஏக்கள் தங்களது பதவியை கோரி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு பின் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், பா.ஜ., தேர்தலில் தோல்வியடைந்தது. அதன் பிறகு பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். புதுச்சேரி சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாஜக எம்எல்ஏக்களில் 3 பேர் ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், மற்ற 3 பேர் தனிமையில் உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆகியோருடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேரவில்லை. இதனால் புதுவை பா.ஜ.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணி பா.ஜ., சார்பு சுயேட்சைகளில் 7 பேர் போர்க்கொடி ஏற்றினர்.
அதில், பா.ஜ., ஆதரவு சுயேச்சை அங்காளன், முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் லஞ்சம் அதிகரித்து, இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றார். அதன்பிறகு 7 பேரும் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மக்வால், கட்சி அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினர்.
கட்சியிலும் விரிசல்: கடந்த சட்டசபை தேர்தலின் போது புதுச்சேரி பாஜக தலைவராக இருந்தவர் சாமிநாதன். முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி அதிக ஆண்டுகள் தலைவராக இருந்ததால் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தது. மாநில தலைவருக்கு எதிராக பாஜக கட்சிக்குள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
இதனால் போராடியவர்களை அகற்றும் நிலை உருவாகியுள்ளது. இப்போதைய தலைவரை முன்னாள் தலைவர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசின் கூட்டணியை ஆதரிக்கும் பாஜக எம்எல்ஏக்கள், கட்சி கட்டமைப்பிற்குள் சிக்கலை உருவாக்கினர்.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள், குற்றச்சாட்டுகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, சுரானாவுக்கு, அக்கட்சி தலைமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, பா.ஜ., தரப்பில், “”நாளை காலை, 10.30 மணிக்கு, நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு வந்து, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சு நடத்துகிறார். அதன்பின், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இது குறித்து, பா.ஜ., மாநில தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.