தஞ்சாவூர்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி ரெயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் ரெயில்வே எலக்ட்ரிக்கல் அலுவலகம் முன்பு இன்று எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். கிளை செயலாளர் வேலு, அரியலூர் கிளை செயலாளர் செல்வகுமார், கிளை தலைவர்கள் தமிழரசு (கும்பகோணம்), பிரபாகரன் (திருவாரூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொதுச்செயலாளர் ஜெயக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஒய்வறைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்வினியோகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.