சென்னை: இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை (பிப்.27) டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.