சென்னை : 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் (MET) வெளியிட்டுள்ளது.
நாளை 3ஆம் தேதி வரை மழை பெய்யும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.