தஞ்சாவூர்: ரோட்டரி சங்கம் தஞ்சாவூர் மெஜஸ்டிக் சிட்டி சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார். தலைவர்
செந்தில்வேலன் தலைமை தாங்கினார். உதவி ஆனுநர் மண்டலம்-21 தமிழ்செல்வன், ரோட்டரி சங்கம் தஞ்சாவூர் பிக் டெம்பிள் சங்க ஆலோசகர் அருண்ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 38 பேருக்கு விருதுகளை சரஸ்வதி மஹால்நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்கம் தஞ்சாவூர் மெஜஸ்டிக் சிட்டி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்