டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பாஜக சதி செய்வதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார் மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.பி. பாஜகவும், டெல்லி கவர்னர் சக்சேனாவும் கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்று சஞ்சய் சிங் கூறினார்.
சிறையில் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும், டெல்லி ஆளுநரும், மத்திய பாஜகவும் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும், இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். டெல்லி ஆளுநர் மற்றும் பாஜக மீது விரைவில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறினார்.