சென்னை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடந்தது.
சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பேசுகையில், ”மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் மத நல்லிணக்கம், ஒற்றுமை நடைபயணம் நடத்த வேண்டும். வடசென்னையில்.. இதன் அடிப்படையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க நடைபயணம் நேற்று நடந்தது.
கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்கு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லிபாபு தலைமை வகித்தார். அதன்பின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை மத நல்லிணக்கம், ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொடுங்கையூரில் இருந்து தொடங்கிய நடைபயணம் மகாகவி பாரதி நகர், சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி மார்க்கெட், பெரம்பூர் ரயில் நிலையம் வரை சுமார் 12 கி.மீ.
விழிப்புணர்வு பிரசாரம்: நடைபயணத்தை துவக்கி வைத்து செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ”காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் இதுபோன்ற நடைபயணத்தை நடத்துவார்கள்.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மத நல்லிணக்க நடைபயணம் நடைபெறும். மக்களிடையே அன்பு, மத நல்லிணக்கம், போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல செய்திகளை கொண்டு செல்வோம்,” என்றார்.