சென்னை : வயலில் சோலார் பவர் அமைத்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயலில் சோலார் பம்ப் செட் அமைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மின்சாரவாரிய கள அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாம்.
இந்த சுற்றறிக்கையில் இலவச மின்சாரம் கோரி வந்துள்ள புதிய விண்ணப்பங்கள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை ஏற்காமல் நிராகரிக்கும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவல் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து அரசு உடன் உண்மையான தகவல் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.