சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:- ஜனவரி 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை), 4-ம் தேதி (சனிக்கிழமை), 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும், தமிழகம் முழுவதும் பிற இடங்களுக்கும் அதிகப் பயணிகள் செல்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 245 பேருந்துகளும், நாளை 240 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மொத்தம் 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து இன்றும் நாளையும் மொத்தம் 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.