சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுப்பில், 1,731 பேர் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதற்காக அரசு மருத்துவமனையில் நவம்பர் 15-ம் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
அதன்படி, வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.