சென்னை: சுக்கான் கீரையில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுக்கான் கீரை சில இடங்களில் சுக்காங்கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரையின் மருத்துவ குணம் பலருக்கும் தெரியாததால், இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்காங் கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்பு தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கும்.
இக்கீரையை சுத்தம் செய்து மிளகுத்துள் சேர்த்து சூப் செய்து குடித்தால் பித்தம் குறைந்து, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலையின் அளவை குறைக்கும். தேள் கொட்டிய இடத்தில் இக்கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறைந்து, விஷம் வெளியேறும்.
பாசிபருப்புடன் இக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். உணவில் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. சுக்காங்கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி அதிகரிக்கும், சரியான நேரத்திற்கு பசி தூண்டும். மேலும் ஈரல் ஆரோக்கியமாக இருக்கும்.
இக்கீரையின் வேரை பொடி செய்து தினமும் பல துலக்கி வந்தால் பற்கள் பலப்படும், ஈறுகள் உறுதியாகும். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்தம் அழுத்தம் கொண்டவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் சீராகும். இக்கீரையோடு புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் சேர்த்து வேக வைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.