ராமேஸ்வரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 படகுகளில் 3,000 மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம் மற்றும் உதிர்தராஜ் ஆகியோரின் இரண்டு படகுகளை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து படகுகளில் செபஸ்டியன் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாச்சி (36), சாமுவேல் (33), பிரிச்சோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியா ஸ்டெடின் துரை (39), அருள் தினகரன் (23), சுரேஷ் (45), ஜீவன் பிரஷர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) மற்றும் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 55 தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 413 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.