சேலம்: ஐஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு, லேப்டாப் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
JEE Advanced தேர்வில் வெற்றி பெற்று IIT-ல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி.
இந்நிலையில், சேலம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அம்மாணவிக்கு ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை வழங்கினார். அதோடு ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் அவர் வழங்கினார்.
இந்த வீடு தொல்குடித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.