சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோடை வெயிலால் வாடும் பறவைகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவோம் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஈரோடு, வேலூர், கரூர், மதுரையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தர்மபுரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது. கடும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவில், “கோடை வெப்பத்தால் அவதிப்படும் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தானம் செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.