தமிழக சட்டசபையில் இன்று மாநில சுயாட்சி தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதை வெளியிட்டு அவர் கூறியதாவது:- மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026 ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்.
இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை இக்குழு அரசுக்கு அளிக்கும். மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகிய துறைகளை மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. நீட் தேர்வு மருத்துவக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்துள்ளது. நீட் தேர்வால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துள்ளது. இதனால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழகம் கடுமையாக எதிர்த்தது. மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து மாநில உரிமைக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில், மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும்.
அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக் கமிஷன் முன்னாள் தலைவர் நாகநாதன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026 ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இதை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.