தமிழக முதல்வர் ஸ்டாலின், பஹ்ரைனில் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களை விடுவிக்க வேண்டிய சட்ட மற்றும் தூதரக உதவிகளை விரைவில் வழங்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
11-9-2024 அன்று, திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது எல்லையை கடந்ததாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர், மேலும் அவர்களின் ஒரே வருமானம் இழக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.