சென்னை : இன்று முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 7,842 மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 வரையும், +2 மாணவர்களுக்கு ஏப்.4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடக்கும் இந்த தேர்வுக்கு ஹால் டிக்கெட், ஸ்கூல் ID கார்டு அவசியம்.