திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திமுக பிரமுகர் நடத்தி வரும் காலணி கடையில் ரூ.50 ஆயிரத்தை லாவகமாக திருடிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி திருவெறும்பூரில் திமுக பிரமுகர் உமர் பாருக் என்பவர் காலணி கடை நடத்தி வருகிறார். இவரது காலணி கடையில், செருப்பு வாங்குவது போல நடித்து பணிப்பெண்ணின் கவனத்தை திசை திருப்பி கல்லாப் பெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை நபர் ஒருவர் திருடிச் செல்லும் சி.சி.டிவி பதிவு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உமர் பாருக் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிப் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி தி.மு.க பிரமுகர் கடையில் ரூ.50,000 திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.