கடலூர்: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (அக்.16) காலை கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உள்ளது.
மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (அக்டோபர் 16) காலை கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது. எண் 3 என்றால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு திடீர் காற்று மற்றும் மழை பெய்யும்