தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று நடந்த கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். அதையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை; தி.மு.க.வும் அதை கவனத்தில் கொள்ளவில்லை.
தொழிலாளர் நல அரசு என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், அது செயல்படவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். பொறுப்பேற்ற பிறகு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால் அரசு கடைகளை மூடிவிட்டு தனியாருக்கு இன்ப மண்டபங்களாக உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் அரசு செய்யும் தொழிலை தனியாருக்கு மாற்றும் போக்கு உள்ளது. கணினி மயமாக்கப்பட்ட ரசீது முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. பணியாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் மன அழுத்தத்திலும் உள்ளனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாறுதல், பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியின் தலையீடு உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, கண்மூடித்தனமாக வசூலிக்கும் ஆளுங்கட்சியின் போக்கு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கூட்டமைப்பு துணைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலர் கே.அன்பு, கூட்டமைப்பு மாவட்டச் செயலர் க.வீரய்யன், தலைவர் மதி, பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.