By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..
    1 Min Read
    தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
    1 Min Read
    கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதை நிறுத்தாவிட்டால் போராட்டம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதை நிறுத்தாவிட்டால் போராட்டம்..!!
தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதை நிறுத்தாவிட்டால் போராட்டம்..!!

admin
Last updated: November 17, 2024 10:37 am
By admin 1 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று நடந்த கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். அதையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை; தி.மு.க.வும் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

தொழிலாளர் நல அரசு என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், அது செயல்படவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். பொறுப்பேற்ற பிறகு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால் அரசு கடைகளை மூடிவிட்டு தனியாருக்கு இன்ப மண்டபங்களாக உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

Tasmac Workers Protest,Coimbatore: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்... அரசு  ஏற்குமா? - tasmac workers protesting in front of wine shops in coimbatore  against opening - Samayam Tamil

இன்னும் சொல்லப்போனால் அரசு செய்யும் தொழிலை தனியாருக்கு மாற்றும் போக்கு உள்ளது. கணினி மயமாக்கப்பட்ட ரசீது முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. பணியாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் மன அழுத்தத்திலும் உள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாறுதல், பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியின் தலையீடு உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, கண்மூடித்தனமாக வசூலிக்கும் ஆளுங்கட்சியின் போக்கு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கூட்டமைப்பு துணைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலர் கே.அன்பு, கூட்டமைப்பு மாவட்டச் செயலர் க.வீரய்யன், தலைவர் மதி, பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You Might Also Like

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:

கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

TAGGED:EmployeesIntimidationTasmacஎச்சரிக்கைடாஸ்மாக் ஊழியர்போராட்டம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?