சென்னை: பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்து துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், பதவி உயர்வு, விருப்ப இடமாற்றம் போன்றவை வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஏபிசி அமைப்பின் மூலம் இடமாற்றங்களை வழங்குவதில் இருந்து அமைச்சக ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பல ஆண்டுகளாக விருப்ப இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களை கவுன்சிலிங் அடிப்படையில் இடமாற்றம் செய்து காலி பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஊழியர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் சில நிர்வாகிகளுடன் கமிஷனர் சுன்சோங்கம்ஜடச்சிரு பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.