சென்னை : ஒரு லட்சத்தை கடந்த மாணவர்கள் சேர்க்கை … தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்தது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை தற்போதுவரை 14 வேலை நாட்களை கடந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 8,000க்கும் அதிகமான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.