ஆர்.கே.பேட்டை: சமீபத்தில் பெய்த கனமழையால் ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எறும்பி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஏரியில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் குளித்து விளையாடி வருகின்றனர்.
ஏரிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ, நீந்தவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்தும், எறும்பி கிராமத்தில் உள்ள ஏரியில் மாணவர்கள் குளித்து விளையாடுவதை வருவாய் துறையினரோ, போலீசாரோ கண்டுகொள்ளவில்லை. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், இதுபோன்ற செயல்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.