சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடத்தில் ஆய்வு நடைபெற உள்ளதால், வைகை, பல்லவன், செந்தூர் உள்ளிட்ட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:- புதுச்சேரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16116) மார்ச் 9-ம் தேதி காலை 5.35 மணிக்கு புறப்படும், செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 9-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையே மார்ச் 9-ம் தேதி காலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606) தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி – எழும்பூரில் இருந்து மார்ச் 9-ம் தேதி காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20666) மாம்பலம் – எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மார்ச் 9-ம் தேதி காலை 6.45 மணிக்கு மதுரை – எழும்பூர் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் (12636) தாம்பரம் – எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் (16127) மார்ச் 9-ம் தேதி காலை 10.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் அன்றைய தினம் காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். 9-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு 2.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
9-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665) சென்னை எழும்பூர் – மாம்பலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாம்பலத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும். 9ம் தேதி மாலை 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய எழும்பூர் – காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். மொத்தம் 20 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.