தஞ்சாவூர்: ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்புத் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சாவூர் வட்ட கிளை சார்பில் தஞ்சாவூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலக வாயில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் காமராஜ் வரவேற்புரை ஆற்றினார். மோகன்தாஸ், கணேசன், ஜெயச்சந்திரன், செல்வராஜ், ராதா, ராஜ்குமார், கருப்பையின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் கோரிக்கையை முன்மொழிந்து பேசினார். சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், தமிழ்மணி ஞானசேகரன் காணிக்கை ராஜ், சங்கர், அதிதூதமைக்கேல்ராஜ், ஆரோக்கியசாமி ஆகிய வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாவட்ட பொருளாளர் முனியாண்டி நன்றியுரை ஆற்றினார்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மோசமான முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசும், வாரியமும் பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய முத்தரப்பு ஒப்பந்ததை உருவாக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவாகும் முழுத் தொகையையும் திரும்ப வழங்கும் வகையில் இத்திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அறிவித்திட வேண்டும். அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல பணிக் கொடைத் தொகையை ரூ. 25 லட்சமாக உயரத்தி வழங்கிட வேண்டும்.ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்புத் தொகையை ரூபாய் 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்