தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் மற்றும் 10 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர்.
ஆய்வில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை அரசு கைது செய்தது. இதையடுத்து அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் ரூ.3.5 கோடி அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி தருவைகுளத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் 22 பேரில் 10 பேருக்கு இலங்கை அரசு தலா ரூ. 3.5 கோடி மற்றும் 6 மாத சிறை தண்டனை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை நீதிமன்றம் முன்பு தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி தருவைகுளத்து மீனவர்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.