இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும் விடுதலை அளிக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க வருகின்றனர். அவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்து அவர்களின் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்து வருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை தாக்குவதும், சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று ‘இலங்கை சுதந்திர தினம்’. இந்நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரம் அளித்து நீதியும் நியாயமும் மனிதாபிமானத்துடன் நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.