
சென்னை: புயல் இன்று கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:- சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தக்கூடாது. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
புயல் கரையை கடக்கும் போது ECR மற்றும் OMR சாலைகளில் பொது போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை மற்றும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான இடங்களில் கிரேன்கள், உயரமான இடங்களில் உள்ள உபகரணங்கள், விளம்பரப் பலகைகள் சாய்ந்து விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை கீழே இறக்க வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம். இன்று நடைபெற இருந்த தொலைதூர தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.