டெல்லி: நாட்டிலேயே தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 2016-ம் ஆண்டு முதல் தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
ஆனால், 2022-2023-ம் ஆண்டில் கேரளா 563 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்தது. அதே ஆண்டில் கர்நாடகா 595 கோடி தேங்காய் உற்பத்தி செய்தது. இதன் அடிப்படையில் கேரளாவை விட சுமார் 30 கோடி தேங்காய் அதிகம் உற்பத்தி செய்து கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. 2023-24-ம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி, 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
578 கோடி தேங்காய் உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 564 கோடி தேங்காய் உற்பத்தியாகி கேரளா மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.