மேட்டூர் அணையை துார்வார முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தற்போது அறிவித்துள்ளார். மணல் சரியான இடத்தில் குவியும் என்றும், இதுபோன்ற வண்டல் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை என்றும் அவர் கூறினார்.
90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இந்த அணையை தூர்வார வேண்டும் என சேலம் மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 1.40 லட்சம் யூனிட் மண் அள்ளும் பணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், துரைமுருகன் பேசுகையில், தற்போது அணையைத் தோண்ட முடியாது என்று மறுத்தார்.
மேட்டூர் அணையை எப்படியும் துார்வார முடியாது என திடீர் விளக்கம் அளித்தார்.