சென்னை: ‘தி கோட்’ படத்தின் விளம்பரத்துக்கு கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய உடனேயே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, கட்சியில் முதல் உறுப்பினராகவும், நடிகராகவும் தனது பெயரை பதிவு செய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
. இதையடுத்து தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். மேலும், கட்சியில் யாருக்கு, என்ன பதவி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் விஜய், அடுத்த மாதம் பிரமாண்ட மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளார். தற்போது, மாநாடு நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அரசியல் தலையீடு காரணமாக, திருச்சியில் மாநாடு நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘தி கோட்’ திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘தி கோட்’ படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்துமாறும், அதே நேரத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் விஜய் மக்கள் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு பின், ‘தி கோட்’ படத்தின் புரமோஷன் பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முக்கியமாக, படத்துக்காக தயாராகும் பேனர்களில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் பெயருக்குப் பதிலாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை நிர்வாகிகள் பயன்படுத்தி வருகின்றனர்.