சிவகங்கை: சிவகங்கையில் பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வந்த செல்வக்குமார் கடந்த 27 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், செல்வக்குமாரின் தாயார் தலைமையில் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர்.