சென்னை : தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இரவு பத்து மணி வரை மழை இப்பயே வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்லில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நீலகிரி, ஈரோட்டில் மழை பெய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.