தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி, பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பு காட்சியளித்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாவட்ட நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், கோவில் கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று முதல் மே 10-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மே 1-ம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் நடக்கிறது.
மே 2-ம் தேதி முத்து பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும், மே 7-ம் தேதி காலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் தேரில் புறப்பாடும், அன்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள், 10-ம் தேதி நடராஜர் வீதியுலாவும், நான்கு வீதிகளில் நடராஜப் பெருவிழாவும், சிவகங்கைக் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.