தஞ்சாவூர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் இடையேயான பனிப்போரால் போலீசார் குவிக்கும் நிலை ஏற்பட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தருக்கும், பொறுப்பு பதிவாளருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் பரபரப்பு நிலவியது.
துணைவேந்தர் சங்கருக்கும், பதிவாளர் தியாகராஜனுக்கும் இடையே நீண்டநாளாக பனிப்போர் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொறுப்பு துணைவேந்தரான சங்கர், பதிவாளர் தியாகராஜனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வெற்றிச்செல்வன் என்பவரை நியமனம் செய்தார். தொடர்ந்து வெற்றிச்செல்வன் பதவியேற்க வந்தபோது தியாகராஜன் பதிவாளர் அறையை பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்று வேறு அறையில் அமரந்து பணியைத் தொடரந்தார்.
பூட்டப்பட்ட அறையை மாற்று சாவிக் கொண்டு திறக்க முயற்சித்தும் முடியாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று வெற்றிச்செல்வன் பதவியேற்றார்.