சென்னை: விடுதியில் தங்குவதற்கு இலவச அறை கொடுத்தால் தடையின்றி சாட்சியாக செயல்பட்ட தீயணைப்பு துறை அதிகாரியை பணி நீக்கம் செய்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக தீயணைப்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய பரமசிவம், தனக்கு இலவச தங்குமிட வசதி அளிக்கும் தனியார் விடுதிகளுக்கு உடனடியாக தடையில்லாச் சான்றிதழை வழங்கினார்.
தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை துறை ரீதியான விசாரணையை தாமதப்படுத்துவது, உரிய உத்தரவு பிறப்பிக்காதது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2013ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமசிவம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தீயணைப்பு துறை அதிகாரி பரமசிவம் பணியிடை நீக்கம் செய்தது தவறு.
இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விடுதியில் அறை எடுத்து தங்குவது சகஜம். பதவி நீக்கம்தான் இதற்கு மிகப்பெரிய தண்டனை. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் வாதிடுகையில், தீயணைப்பு துறை அதிகாரியாக பணியாற்றிய பரமசிவம் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
அப்போது அவருக்கு இலவச அறைகள் வழங்கப்பட்ட ஓட்டல்களுக்கு தடையில்லா சான்று வழங்க அதிகாரி சாதகமாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை நீதிபதிகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அவரை பணி நீக்கம் செய்தது சரிதான் என்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.