சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 1-ம் தேதி தகுதித் தேதியாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை களைந்து, ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவுகளை மாற்றுதல், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெறப்படும்.
அதற்கான படிவம் 6, 6B, 7, 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
https://voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ‘VOTER HELPLINE’ என்ற மொபைல் ஆப் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சனி மற்றும் ஞாயிறு சிறப்பு முகாம்: பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) தமிழகம் முழுவதும் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.