பாபநாசம்: இஸ்லாமியர்களின் புனித தினங்களாக கருதப்படும் ரமலான் நோன்பு பண்டிகை கடைபிடிக்கும் நாள் துவங்கி உள்ளது. .
பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு இரவு தொழுகையில் ஈடுபட்டனர் இஸ்லாமியர்கள். தமிழகம் முழுவதும் பிறை தெரிந்ததை அடுத்து இஸ்லாமியர்களின் புனித நாளான, ரமலான் பெருநாள் நோன்பு பண்டிகை சிறப்பு தொழுகை இன்று துவங்கியது.
இஸ்லாமியர்களின் புனிதமான தினங்களாக கருதப்படும் ரமலான் நோன்பு பண்டிகையை கடைப்பிடிக்கும் நாள் இன்று முதல் தொடங்கி தொடர்ந்து 30-நாட்கள் நடைபெறுவது வழக்கம்..
ரமலான் தினங்கள் முடியும் வரை விடியற்காலை 4-மணி அளவில் உணவு சாப்பிட்டு பகல் முழுவதும் தொடர்ந்து வெறும் வயிறுடனே பட்டினி கிடந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவது இஸ்லாமியர்கள் கடமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது..
அதன் அடிப்படையில் பாபநாசம் தாலுக்கா சுற்றி உள்ள பகுதிகளான பாபநாசம், அய்யம்பேட்டை, இராஜகிரி, கபிஸ்தலம், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..