ஆயுள் தண்டனை கைதிகளை உரிய காரணமின்றி முன்கூட்டியே விடுதலை செய்வதை முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகும் ஆளுநர் நிராகரிக்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை மற்றும் கோவை சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 10 பேர் நல்ல நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முதல்வர் அனுமதி அளித்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அனுமதியை நிராகரித்து விட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.
அரசின் பரிந்துரை மற்றும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு மதிப்பளித்து, உரிய காரணமின்றி முடிவுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், இந்த கோப்புகளை 8 வாரங்களுக்குள் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.