
விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தர்ஷினி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் நடந்த பாடல் போட்டியில் கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார்.
அப்போது அம்மணம்பாக்கத்தில் இருந்து ஆனந்தமங்கலம் வரை பள்ளிக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு திட்டம் மூலம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்ணின் கோரிக்கையை ஏற்று அம்மணம்பாக்கம் – அனந்தமங்கலம் இடையே இலவச பேருந்து போக்குவரத்து வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர உத்தரவிட்டார் .

இதைத்தொடர்ந்து, சிறுமி தர்ஷினியை முன்னிலைப்படுத்தி அம்மாணம்பாக்கம் – ஆனந்தமங்கலம் இடையே இலவச பேருந்து போக்குவரத்து வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.